×

அவதூறு செய்திகள் வெளியிட்டன இந்தியா, பாக்.கை சேர்ந்த 8 யூடியூப் சேனல் முடக்கம்; ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக தவறான, அவதூறு செய்திகளை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கி உள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள்  மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 கீழ் பாகிஸ்தானில்  இருந்து செயல்படும் ஒரு யூடியூப் சேனல், இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இவை 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டவை. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள், வழிபாட்டு தலங்களை இந்திய அரசு இடிப்பதாகவும், மத பண்டிகைகளைக் கொண்டாட தடை விதிப்பதாகவும், இந்தியாவில் மதப் போரை பிரகடனம் செய்து செயல்பட்டு வருவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்டு உள்ளன. இது, நாட்டில் மத நல்லிணக்கத்தையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என கண்டறியப்பட்டது. மேலும், இந்திய ஆயுதப்படைகள், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் போன்றவற்றுக்கு எதிராகவும் போலி செய்திகளை பரப்ப, இந்த யூடியூப் சேனல்கள் பயன்படுத்தப்பட்டதால், இவை முடக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அவதூறு செய்திகள் வெளியிட்டன இந்தியா, பாக்.கை சேர்ந்த 8 யூடியூப் சேனல் முடக்கம்; ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : YouTube ,India, ,Pakistan ,Union government ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை...